ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 28 பேர் பலி...90 பேர் படுகாயம்

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

எகிப்து நாட்டில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 28-க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எகிப்தில் உள்ள அலெக்ஸான்ட்ரியா நகரில் சற்று முன்னர் இரண்டு ரயில்கள் பயங்கரமாக மோதியுள்ளன.

இவ்விபத்தில் 28 பேர் பலியாகியுள்ளதாகவும், 90 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், விபத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்