பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com
advertisement

பிலிப்பைன்ஸ்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2-ஆக பதிவாகியுள்ளது.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தரப்பில், "பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தென்பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

advertisement

இந்த நில நடுக்கம் பூமிக்கடியில் 173 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதன் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்து சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை" என்று கூறியுள்ளனர்.

இருப்பினும் பாதிப்புகள் குறித்த கூடுதல் தகவல்களை திரட்டி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்