இறுதி நாட்களில் பூமி– நிரூபு கிரகத்தினால் பீதியில் மக்கள்

Report Print Thayalan Thayalan in இயற்கை
இறுதி நாட்களில் பூமி– நிரூபு கிரகத்தினால் பீதியில் மக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

பூமியானது தனது இறுதி நாட்களை எட்டிவிட்டதாகவும் இதன்காரணமாக பூமி மிகப்பெரிய அழிவினைச் சந்திக்கும் என்ற சதியாலோசனை கோட்பாடு ஒன்று (Conspiracy theory) வேகமாக பரவிவருகின்றது.

இது தொடர்பில் மேற்குலக ஊடகங்களில் அதிகமான செய்திகள் வெளிப்படுத்தப்பட்டு வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சதியாலோசனை கோட்பாடு என்பது வியூகத்தின் அடிப்படையில் உருவான விளக்கமாக அல்லது கருதுகோளாக அமையும். இது சில நபர்கள் இணைந்து அல்லது ஒரு நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட செய்தியாக காணப்படும்.

இதுவரை பல்வேறு விதமான சதியாலோசனைக்கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டு அவற்றில் பல நிறைவேறியும் உள்ளன என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

இந்த நிலையில், அண்மையில் நிரூபு என்ற இருண்ட கிரகத்தினால் மோதுண்டு பூமி பாரிய அழிவைச் சந்திக்கும் எனவும் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் தொடர்ந்து பூமி 7 ஆண்டுகளுக்கு அழிவைச் சந்திக்கும் எனவும் சதியாலோசனை கோட்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பக்கம், மதக்கோட்பாட்டினை முன்வைப்பவர்களும், நிரூபு கிரகம் உண்மை எனவும் இந்த அழிவு ஏற்கனவே கூறப்பட்டது எனவும் தெரிவித்து வருகின்றனர்.

அதற்கு ஏற்ததைப்போல் தற்போது பூமி பல்வேறு மனித, இயற்கை அழிவுகளைச் சந்தித்து வருவதாகவும், இது பூமி அழிவிற்கான அறிகுறி எனவும் மதம் மற்றும் சதியாலோசனை கோட்பாட்பாட்டாளர்கள் இணைந்து கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே பூமி அழியும் என பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வந்த காரணத்தினால் தற்போதும் இது வதந்தியே என ஒரு தரப்பினர் கூறிவருகின்றபோதும் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, பண்டைய கால குறிப்புகள் மற்றும் தீர்க்க தரிசனங்களை ஆராய்ந்த ஒரு சில ஆய்வாளர்களும் இதேவகையில் பூமியின் அழிவு நடக்கப்போகின்றது என்ற தகவல்களை தற்போது வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்