இந்த காளையின் விலை 21 கோடியாம்: எடை எவ்வளவு தெரியுமா?

Report Print Printha in இயற்கை
2625Shares
2625Shares
lankasrimarket.com

இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே தனக்கென்று ஒரு தனி அடையாளம் கொண்டு வாழ்ந்து வருகிறது முர்ரா இனத்தை சேர்ந்த சுல்தான் காளை மாடு.

கம்பீரம்மாக உலா வந்துக் கொண்டிருக்கும் இந்த காளையின் வயது 8 தான். இந்த காளைக்கு தினமும் மாலை விஸ்கி கொடுப்பார்களாம். அந்த காளையும் அதை விரும்பி குடிக்குமாம்.

பின் இந்த சுல்தானை தினமும் 5 கிலோ மீட்டர் நடக்க வைத்து, இரண்டு முறைகள் குளிக்க வைப்பதால், இதன் சருமம் மிகவும் மென்மையாக இருக்குமாம்.

சுல்தானின் உடல் எடை 1500 கிலோ. ஏறத்தாழ சுல்தானின் உயரம் 6 அடி நீளம் 14 அடி ஆகும்.

இந்த சுல்தான் காளையின் தற்போதைய மதிப்பு 210 மில்லியன் அதாவது 21 கோடியாகும். இந்த சுல்தான் காளை இதுவரை கலந்து கொண்டதில் 6,7 போட்டிகளில் முதல் பரிசு வென்று அசத்தியுள்ளது.

சுல்தான் காளையின் விந்து மிகவும் தேவைப்படும் ஒன்றாக உள்ளதால், இதன் விந்தை ஒரு டோஸ்-க்கு ரூ.300 என்று விற்கிறார்கள்.

இந்த சுல்தான் காளையை வளர்ப்பவர்கள், ஒரு வருடத்திற்கு சுல்தானின் விந்து மூலம் மட்டுமே 1 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்