சென்னை கடலில் மூழ்கும்: அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in இயற்கை
1416Shares
1416Shares
lankasrimarket.com

உலக வெப்பமயமாவதால் 2050-ல் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் கடற்பகுதிக்குள் சென்று விடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் சுற்றுசூழல் துறைக்கு கீழ் இயங்கும் மாநில நிலம் பயன்படுத்துதல் ஆராய்ச்சி வாரியம், தமிழக இயற்கை சூழ்நிலைகள் குறித்து ஆய்வு நடத்தியது.

இதில், பருவநிலை மற்றும் உலக வெப்பமயமாதல் காரணமாக தமிழ்நாட்டில் பெரிய பாதிப்புகள் ஏற்படும் என தெரியவந்துள்ளது.

உலக வெப்பமயம் அதிகரிப்பால் அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வருவதன் காரணமாக 2050-ல் கடல் மட்டம் 4.8 மீட்டர் அளவிற்கு உயரும் என்று தெரியவந்துள்ளது.

இதனால் உலகம் முழுவதும் கடல் நீர்மட்டம் உயர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டை பொருத்தவரை 2050-ம் ஆண்டில் கடலோர பகுதியில் 4.35 மீட்டரில் இருந்து 6.85 மீட்டர் வரை நீர்மட்டம் உயரும் என்று தெரியவந்துள்ளது.

இதனால் தமிழ்நாட்டின் 1963 சதுர அடிகளை கடல் விழுங்கி விடும். அதே நேரத்தில் சென்னையின் 144 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கடலுக்குள் செல்வதால் அங்கு செய்துள்ள ரூ.7 லட்சத்து 1790 கோடி பணம் வீணாகிவிடும்.

இதோடு கடல் அரிப்பும் அதிகமாவதோடு. கடற்கரை பகுதிகள் அழிய தொடங்கும். மேலும், கடல் அலையின் சீற்றமும் அதிகரித்து ராட்சத அலைகள் ஊருக்குள் புகும் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்