இலங்கையில் புதிய இன பாம்பு கண்டுபிடிப்பு!

Report Print Samy in இயற்கை
0Shares
0Shares
lankasri.com

.இலங்கைக்கே உரித்தான புதிய வகை பாம்பு இனமொன்று, சிவனொளிபாதமலை காட்டுப் பகுதியில், ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிடிரா ராவனாய் (Aspidurai Ravanai) என அழைக்கப்படும் இந்த பாம்பு இனம், சிவனொளிபாத மலையின் மேற்கு மலையடிவாரத்திலிருந்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பாம்பு தொடர்பில், ஆராய்ச்சி சஞ்சிகையான சூடாஸ்கா சர்வதேச சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

கண்கொத்தி பாம்பு இன வர்க்கத்தைச் சேர்ந்த இந்த பாம்பு, இலங்கைக்கே உரித்தான இனமாகும்.

இந்த கண்டுபிடிப்புடன் இலங்கைக்கே உரிய 51 பாம்பு இனங்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 104 வகை பாம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிவனொளிபாதமலையில் வாழும் உயிரினங்கள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், இந்த பாம்பு இனங்கள் கடந்த 2013ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அலெக்ஸ்சாண்டர் சைரன் உட்பட ஆராய்ச்சியாளர்கள், இந்த பாம்புகளைக் கண்டுபிடித்துள்ளதுடன், இவை தொடர்பான மேலதிக ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

tamilmirror

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்