கார் விற்பனையை குறைக்கவுள்ள சிங்கப்பூர்: காரணம் என்ன?

Report Print Kabilan in வாகனம்
0Shares
0Shares
lankasrimarket.com

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வாகனங்களின் விற்பனையை கட்டுப்படுத்த சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.

சிங்கப்பூரில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, ஆனால் சாலை விரிவாக்கத்துக்கான சாத்தியம் அங்கு இல்லை.

இதன் காரணமாக தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு முதல் கார் விற்பனையை குறைத்து பொது போக்குவரத்து அதிகரிக்கப்படும் எனவும், சரக்கு வாகனங்கள் வழக்கம்போல் தொடர்ந்து இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் நடைமுறைக்கு வர உள்ள இச்சட்டம் இருசக்கர வாகனங்களுக்கும் பொருந்தும் என சாலை போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்