புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் அறிமுகம்

Report Print Murali Murali in பணம்
0Shares
0Shares
lankasrimarket.com

புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய வங்கியின் ஆளுநரிடம் இருந்து புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாளை நிதி அமைச்சர் இன்று பெற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த புதிய நாணயத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்

புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாளில் நான்கு மதங்களின் வழிபாட்டுத் தளங்கள் பொறிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

மேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்