கனடா, அவுஸ்திரேலிய டொலருக்கு எதிராக பலமடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி

Report Print Vethu Vethu in பணம்
227Shares
227Shares
lankasrimarket.com

கடந்த மாதத்தின் இறுதிக் காலத்துடன் ஒப்பிடும் போது அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் 3.7 வீதம் வீழ்ச்சியடைத்துள்ளது.

எனினும் குறித்த காலப்பகுதியில் இலங்கை ரூபாயின் பெறுமதி, கனேடிய டொலர், அவுஸ்திரேலிய டொலர் மற்றும் இந்திய ரூபாயுடன் ஒப்பிடும் போது பலமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் ஏனைய பிரதான நாணயங்களுடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சர்வதேச ரீதியான அமெரிக்க டொலரின் பெறுமதி வலுவடைந்துள்ளது. அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்