256GB சேமிப்பு நினைவகத்துடன் அறிமுகமாகும் OnePlus 6 கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
26Shares
26Shares
lankasrimarket.com

பல்வேறு நிறுவனங்களும் ஸ்மாரட் கைப்பேசி வடிவமைப்பில் ஈடுபட்டு வருவதனால் போட்டி போட்டுக்கொண்டு பல புதிய அம்சங்களை உள்ளடக்கி வருகின்றன.

அதேபோன்று ஏற்கணவே காணப்படும் வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இதேபோன்று OnePlus 6 எனும் சேமிப்பு நினைவகம் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ள புதிய கைப்பேசி ஒன்று எதிர்வரும் ஜுலை மாதம் 10ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இக் கைப்பேசியானது 6.28 அங்குல அளவுடையதும், AMOLED தொழில்நுட்பத்தினைக்கொண்டதுமான FHD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இது தவிர Qualcomm Snapdragon 845 Processor, பிரதான நினைவகமாக 8GB RAM, 256GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் 20 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 16 மெகாபிக்சல்கள், 20 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

இதன் விலையானது 640 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்