4K திரையுடன் அறிமுகமாகும் அட்டகாசமான ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

ஸ்மார்ட் கைப்பேசிகளின் திரையானது மிகவும் துல்லியம் வாய்ந்த காட்சிகளை காண்பிக்கக்கூடியதாக இருக்கின்றமையை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு சோனி நிறுவனம் 4K திரையினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

Xperia XZ2 Premium எனும் இக் கைப்பேசியானது Qualcomm Snapdragon 845 Mobile Processor, பிரதான நினைவகமாக 6GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இதன் சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 400GB வரை அதிகரிகக்க்கூடிதாகவும் இருக்கின்றது.

இவற்றுடன் 19 மெகாபிக்சல்கள், 12 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெரா, 13 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்பு மற்றும் செல்ஃபி எடுப்பதற்கான கமெராவினையும் உள்ளடக்கியுள்ளது.

தவிர நீடித்து உழைக்கக்கூடிய 3450 mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்