ஆப்பிள் இன்டெல் கூட்டணி: அறிமுகமாகும் 5ஜி ஐபோன்

Report Print Samaran Samaran in மொபைல்
105Shares
105Shares
lankasrimarket.com

ஸ்மார்ட்போன் சந்தையில் முடிசூடா மன்னனாய் வலம் வரும் ஆப்பிள் நிறுவனம், இன்டெல் நிறுவனத்துடன் இணைந்து தனது 5ஜி மொபைலை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 மற்றும் ஐபோன் எக்ஸ் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆப்பிள் நிறுவனம் ஆராய தொடங்கிவிட்டது.

5ஜி மொபைலை களமிறக்க திட்டமிட்டுள்ளதுடன், இன்டெல் 5ஜி மோடம் சிப்பை இனி வரும் ஐபோன்களில் பயன்படுத்த முடிவுசெய்துள்ளது.

இதற்காக ஆப்பிள் தொழில்நுட்ப வல்லுநர்கள் இன்டெல் வல்லுநர்களுடன் சேர்ந்து வேலையை தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்டெல் மற்றும் ஆப்பிள் கூட்டணி ஐபோன்களை அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு கொண்டு செல்வதாக அமையும் என்று ஆப்பிள் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்