சாம்சுங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய கைப்பேசியின் அறிமுகம் தொடர்பாக வெளியான தகவல்!

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

ஸ்மார்ட் கைப்பேசி உலகில் பல புரட்சிகளை ஏற்படுத்தி வரும் சாம்சுங் நிறுவனம் மடிக்கக்கூடிய கைப்பேசிகளையும் வடிவமைத்து வருகின்றது.

இக் கைப்பேசி தொடர்பான அறிவித்தலை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த கைப்பேசி எப்போது சந்தைக்கு வருகின்றது என்பது தொடர்பான மற்றுமொரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி 2018 ஆம் ஆண்டில் இக் கைப்பேசியானது விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை சாம்சுங் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான DJ Koh உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இதேவேளை இப் புதிய கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்களை சாம்சுங் நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்