தாவரங்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க உதவும் ஸ்மார்ட் கைப்பேசிகள்

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasri.com

ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் இன்று மனித செயற்பாடுகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும் பல இலகு முறைகள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில் தாவரங்களின் ஆரோக்கியம் தொடர்பாக கண்காணிக்கும் வசதியும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

IoT Gardens எனும் நிறுவனம் இதற்கான துணைச் சாதனத்தினையும், அப்பிளிக்கேஷனையும் வடிவமைத்துள்ளது.

Autonomous Cultivation Controller (ACC) எனும் இத் தொழில்நுட்பத்தின் ஊடாக தாவரத்திற்கு கிடைக்கும் வெப்பநிலை, pH மட்டம் மற்றும் ஒளியின் செறிவு என்பவற்றினை கண்காணிக்க முடியும்.

எவ்வாறெனினும் தற்போது அன்ரோயிட் சாதனங்களில் மட்டுமே இதற்கான அப்பிளிக்கேஷனை பயன்படுத்த முடியும்.

விரைவில் iOS சாதனங்களில் செயற்படக்கூடிய பதிப்பும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்