கடுமையான உடல் துர்நாற்றத்தை போக்கும் டிப்ஸ்

Report Print Printha in மருத்துவம்
0Shares
0Shares
lankasrimarket.com

உடலில் சுரக்கும் வியர்வையில் புரதம் உள்ளது. அந்த புரதத்துடன் பாக்டீரியா சேரும் போது அந்த புரதங்கள் உடைந்து புரப்பியோனிக்(Propionic) எனும் அமிலமாக மாறுவதால் உடலில் துர்நாற்றம் உண்டாகிறது.

உடல் துர்நாற்றத்தை போக்க பின்பற்ற வேண்டியது?

  • தினமும் வெதுவெதுப்பான தண்ணீரில், இரண்டு வேளைகள் கட்டாயம் குளிக்க வேண்டும்.

  • ஒரு பக்கெட் தண்ணீரில் சிறிது வேப்பிலையை கசக்கி தண்ணீரில் ஊற வைத்துக் குளிக்கலாம்.

  • லேவண்டர் ஆயிலில் சில துளிகளை பஞ்சில் நனைத்து, வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகளில் தேய்த்துக் கொள்ளலாம்.

  • தினமும் குளித்து முடித்த பின் ஈரத்தை நன்கு துடைத்து விட்டு, ஆன்டி-பாக்டீரியல் டஸ்ட்டிங் பவுடரை பயன்படுத்தலாம்.

  • அன்றாட உணவுப் பழக்கத்தில் பூண்டு, சில வகை அசைவ உணவுகள், அதிக மசாலா சேர்த்த உணவுகளை தவிர்த்து, க்ளோரோஃபில் நிறைந்த பச்சைக் காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.

  • தினமும் குளிக்கும் நீரில் வெட்டிவேரை சிறிது நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் உடலில் துர்நாற்றம் ஏற்படாது.

  • பட்டைத்தூள் 2 டீஸ்பூன், 1/2 மூடி எலுமிச்சைப் பழம் ஆகிய இரண்டையும் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்றமும், வலியும் போய்விடும்.

  • வினிகர் அல்லது எலுமிச்சைச் சாற்றில் நனைத்த பஞ்சினை அக்குள் பகுதியில் தடவி, சிறிது நேரம் கழித்துக் குளித்தால், வியர்வை நாற்றம் போய்விடும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்