இனிமேல் பாஸ்போர்ட்டை தொலைத்தால் அபராதம்! அரசின் அதிரடி அறிவிப்பு

Report Print Fathima Fathima in மலேசியா
287Shares
287Shares
lankasrimarket.com

மலேசியாவில் பாஸ்போர்ட்டை தொலைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மலேசியா அரசு அறிவித்துள்ளது.

மலேசிய குடியுறவுத்துறை தலைமை இயக்குனர் தத்தோ ஸ்ரீ முஸ்தாபார் அலி கூறுகையில், முதன் முறையாக அடையாள அட்டை காணாமல் போனால் 100 ரிங்கிட் அபராதமும் இரண்டாவது முறை காணாமல் போனால் 300 ரிங்கிட்டும் மூன்றாவது முறை தொலைத்தால் 1000 ரிங்கிட்டும் அபராதம் விதிக்கப்படுவது வழக்கம்.

இதே போன்ற அபராதம் முறை, இனி பாஸ்போர்ட் தொலைப்பவர்களுக்கும் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் தங்கள் பாஸ்போர்ட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள், வேலைக்காக வரும் மக்கள் தங்களுடைய பாஸ்போர்ட்டை தொலைத்து வருவது அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments