நீட்டா அம்பானியின் 24 கேரட் தங்க மொபைல்: விலை எவ்வளவு தெரியுமா?

Report Print Printha in வாழ்க்கை
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் பல வியக்கத்தக்க உண்மைகள் உள்ளது.

நீட்டா அம்பானி ஐபோன் 6 பிங்க் என்ற செல்போனை பயன்படுத்துகிறார். இந்த மொபைல் கிட்டத்தட்ட 48.5 மில்லியன் டாலர்கள் செலவில் வாங்கியுள்ளார்.

அம்பானியின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் பிளாக்பெர்ரி மொபைல் மாடல்களை பயன்படுத்தி வரும் நிலையில் நீட்டா அம்பானி மட்டும் ஐபோன் 6 பிங்க் என்ற மொபைலை பயன்படுத்துகிறார்.

பல்வேறு பாதுகாப்பு அம்சங்களோடு தயார் செய்யப்பட்ட இந்த மொபைல் 24 கேரட் தங்கத்தினால் உருவாக்கப்பட்டதுடன், அதன் பின் பிளாட்டினம் கோட்டிங் செய்யப்பட்டு உடையாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஐபோன் 6 பிங்க் மொபைலை இந்தியாவில் நீட்டா அம்பானி மட்டுமே பயன்படுத்துகின்றார் என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்