ஆண், பெண் மூளையின் வித்தியாசம் தெரியுமா?

Report Print Printha in வாழ்க்கை
0Shares
0Shares
lankasrimarket.com

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மனம், உடல் அமைப்புகள் மட்டுமில்லாமல் மூளையிலும் வித்தியாசம் உள்ளது.

மூளையில் உள்ள வித்தியாசத்தினால் தான் ஆணை பெண்ணாலோ அல்லது பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

ஆண் மற்றும் பெண் மூளையில் உள்ள வித்தியாசம் என்ன?

பெண்கள் மூளையின் அமைப்பு 3 மையங்களை கொண்டது. அதில் முதல் மையம் உணர்ச்சிகள், இரண்டாவது மையம் மொழி, வார்த்தை, உரையாடல், ரசிக்கும் தன்மை.

மூன்றாவது மையம் முகத்தின் சாயலை கொண்டு ஒருவரை துல்லியமாக எடைபோடும் தன்மை ஆகும்.

ஆண்கள் மூளையிலும் மூன்று வகையான மையங்கள் உள்ளது. ஆனால் அது வேறுவிதமாக செயல்படுகிறது.

எப்படியெனில் ஆண்கள் ஒரு விடயத்தை பெண் பேசுவது போல் விவரித்து, கூற முடிவதில்லை. ஆண்கள் தான் உணரும் அந்த உணர்ச்சியை ஒரு பெண்ணைப் போல் மொழியால் விவரிக்காமலும், எதிராளியின் முக அமைப்பை கொண்டு அவர் மனதை புரிந்து கொள்ளவும் முடிவதில்லை.

ஆணுக்கான மூளை அமைப்பு கண்களில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. அதனால் தான் சில ஆண்கள் அழகான பெண்களை மட்டுமே விரும்புகிறார்கள்.

ஆனால் பெண்களுக்கு ஆண்களை பார்ப்பதால் மகிழ்ச்சி கிடைக்காது, பேச்சு மூலம் தான் மகிழ்ச்சி கிடைக்கும்.

அதனால் தான் பெண்கள் அழகை பார்க்காமல் அதிகம் பேசிக்கொண்டே இருக்கும் ஆண்களை விரும்புகிறார்கள்.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்