2018 ஆம் ஆண்டில் கண்டிப்பாக இதனை பின்பற்றுங்கள்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை
0Shares
0Shares
lankasri.com

2018 ஆம் ஆண்டு இனிதாய் பிறந்துவிட்டது. ஒவ்வொரு புது வருடம் பிறக்கும்போதும் நாம் ஒவ்வொருவரும் சில தீர்மானங்களை எடுப்போம்.

புதுப் புது விஷயங்களைச் செய்யப் போவதாகத் திட்டமிடுவோம், அதற்காக உறுதிமொழி எடுப்போம் அல்லது நம்மிடம் உள்ள கெட்ட விடயங்களை விடப் போவதாகத் திட்டமிடுவோம்.

ஜனவரி மாதத்தில் இதில் உற்சாகத்தோடு தொடங்கினாலும் மாதங்கள் செல்ல, நாம் எடுத்த உறுதிமொழிகள் பாதியிலேயே நின்றுபோகும்.

ஆகவே, இந்த 2018 ஆம் ஆண்டில் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியோடு கீழே கொடுக்கப்பட்டுள்ள விடயங்களை பின்பற்றுங்கள்.

20 வழிமுறைகள்

அன்றாட வேலைகளைப் பட்டியலிட்டு நேரம் ஒதுக்குங்கள்.

எந்த விடயத்தையும் நேர்மறையாக எண்ணுங்கள்.

பலவீனங்களைக் கண்டு பயப்படாதீர்கள்.

அதிகாலையில் 5 - 6 மணிக்கெல்லாம் விழித்திடுங்கள்.

உடற்பயிற்சி செய்யத் தவறாதீர்கள்.

யோகா முறைப்படி பயின்று, வீட்டிலேயே தினசரி முயற்சி செய்யுங்கள்.

தினமும் புத்தகம் வாசிப்புக்கு அரை மணி நேரத்தை ஒதுக்குங்கள்.

அலுவலகம், வீடு தாண்டி பயணம் செய்து இயற்கையை நேசியுங்கள்.

குறுகியகால மற்றும் நீண்டகால இலக்குகளை நிர்ணயித்துச் செயல்படுங்கள்.

உங்களை மகிழ்ச்சியாக்கும் விடயங்களை செய்யத் தவறாதீர்கள்.

தோல்விகளைக் கண்டு அஞ்ச வேண்டாம்.

முடியாது, இல்லை ஆகிய வார்த்தைகளைத் தேவைப்படும் இடங்களில் கண்டிப்பாக உபயோகியுங்கள்.

வேலைப்பளுவை ஏற்றிக்கொள்ளாதீர்கள்.

கனவுகளை விட்டுக்கொடுக்காதீர்.

தினமும் புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.

இரவு 11 மணிக்கு மேல் விழித்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணி நேரம் தூங்கி உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு அளியுங்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்