ஒரு இரவுக்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆண் பாலியல் தொழிலாளர்கள்: அதிர்ச்சி தகவல்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை
1725Shares
1725Shares
lankasrimarket.com

காலம் காலமாக நடைபெற்று வரும் பாலியல் தொழிலில் பெண்கள் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள் என்று அனைவரும் நினைப்பதண்டு, ஆனால் கட்டழகு ஆண்களும் இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

மும்பை, ஹைதராபாத்தை அடுத்து தற்போது சென்னையிலும் ஆண் பாலியல் தொழலாளர்கள் கலாசாரம் அதிகரித்துள்ளது, சுமார் 1000க்கும் மேற்பட்ட ஆண் பாலியல் தொழிலாளர்கள் தற்போது இருக்கிறார்கள்.

பொருளாதாரத்தில் மேம்பட்டு இருக்கும் பெண்கள் வீடுகளில் முடங்கியிருக்கையில் அவர்களுக்கு ஒரு ஆண் தேவைப்படுகிறது. இதுபோன்ற பெண்களுக்கே ஆண் பாலியல் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

சுமார் 20 முதல் 25 வயதிலான ஆண்களையே இடைத்தரகர்கள் இந்த தொழிலுக்கு வலைவீசி தேடி வருகிறார்கள். வயது மட்டுமின்றி கட்டுமஸ்தான உடல், முக வசீகரம், நுனிநாக்கில் ஆங்கிலம், ஹைடெக் கார்கள், மொபைல்கள் என பார்ப்பதற்கு ஹைடெக் மொடல்கள் போன்று இந்த ஆண் பாலியல் தொழிலாளர்கள் வலம் வருகிறார்கள்.

சென்னையில் வேலையின்றி அலைந்து திரியும் நன்கு படித்த ஆண்களை இடைத்தரகர்கள் தொடர்ந்து வேவு பார்க்கிறார்கள்.

இறுதியில் அவர்களிடம் அணுகி தனியார் நிறுவனங்களில் நேர்காணல் நடைபெறுகிறது என அனுப்பி வைக்கிறார்கள்

நேர்காணலில் கேட்கப்படும் கேள்வியில், ஒரு பெண் உங்களை தொட்டால் என்ன செய்வீர்கள் என் கேள்வியை கேட்டு அந்த நபரின் தையரித்தை அளவிடுகிறார்கள். சற்று பயந்த ஆண்களாக இருந்தால், அவர்களை எடுத்துக்கொள்வதில்லை.

நேர்காணலில் வெற்றிபெற்றுவிட்டால் அவர்களுக்கான மாத ஊதியம் பற்றி விளக்கப்படுத்தும்பொழுது கூடவே, ஆண் பாலியல் தொழில் பற்றியும் விளக்கமளிக்கிறார்கள்.

இப்படி, ஒரு Client இருக்கிறார். அவர்களின் வசதிக்கேற்ப நீங்கள் நடந்துகொண்டால் வருமானம் அதிகம் கிடைக்கும் என மூளைச்சலவை செய்கிறார்கள். பணம் அதிகமாக கிடைப்பது, குடும்ப சூழ்நிலை ஆகியவற்றை மனதில் நினைத்து சில ஆண்களும் இந்த தொழிலில் இறங்கிவிடுகிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விலை, வயதுக்கு ஏற்றவாறு விலையை நிர்ணயிக்கிறார்கள். ஒரு இரவுக்கு 1 லட்சத்திற்கு ஐம்பதாயிரம் வழங்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கும் இவர்கள் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள்.

அந்த காலகட்டத்தில் அவர்கள் குறித்த எவ்வித தகவலையும் இவர்கள் கேட்ககூடாது, அதுபோன்று வாடிக்கையாளர்களும் இவர்களை பற்றிய தகவலை சேகரிப்பதில்லை.

அதிகமாக சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டல்கள் மற்றும் ஸ்பாக்கள் இவர்கள் தங்குவதற்கு தெரிவு செய்யப்படுகிறது. தொழில் ரீதியான பின்னணியில் இந்த ஆண் பாலியல் தொழில் நடைபெறுவதால் இவர்களை பிடிப்பது என்பது பொலிசாருக்கு சிரமமாக உள்ளது.

அங்கு சென்று இவர்களிடம் விசாரித்தால், இவர் என்னுடைய PRO, Client என்றும் வேலை நிமிர்த்தமாக எங்கள் சந்திப்பு உள்ளது என பதில் கிடைப்பதால், இவர்களை கண்டுபிடிப்பது பொலிசாருக்கு திணறலாக உள்ளது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்