வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? உப்பு போதுமே

Report Print Santhan in வாழ்க்கை முறை
0Shares
0Shares
lankasrimarket.com

எந்தவொரு நபரும் தம்மையும், தாம் குடியிருக்கும் வீட்டையும் சுற்றி கெட்ட, தீய, எதிர்மறை சக்திகள் வருவதை விரும்ப மாட்டார்கள். உப்பை பயன்படுத்தி வீட்டில் இருக்கும் ஏழ்மை விலக்குதல், கெட்ட சக்திகளை நீக்க முடியும்.

  • கடல் உப்பை நீருடன் கலந்து அதை வீடு முழுக்க கழுவ வேண்டும். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி விடுமாம். இந்த ட்ரிக்கை ஞாயிறுகளில் மட்டும் முயற்சி செய்ய வேண்டாம்.
  • ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகையளவு உப்பு சேர்த்து அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள். இது வீட்டில் இருந்து ஏழ்மை விலக செய்யுமாம். இந்த ட்ரிக்கை செய்யும் போது எப்போதெல்லாம் நீரின் வண்ணம் மாறுகிறதோ, அப்போதெல்லாம் நீங்கள் நீரை மாற்றி உப்பு சேர்த்து வைக்க வேண்டும்.
  • சிவப்பு துணியில் உப்பு சேர்த்து கட்டி வைக்கவும். அதை வீட்டின் நுழைவாயில் பகுதியில் கட்டி தொங்கவிடவும்.இது வீட்டுக்குள் இருக்கும் கெட்ட சக்தி நீங்கவும், நல்ல அதிர்வுகள் நிறையவும் உதவும்.
  • சாப்பிடும் டேபிளில், சாப்பிடும் இடத்தில் உப்பு வைப்பது செல்வசெழிப்பு அதிகரிக்க உதவும்.
  • குளிக்கும் டப்பில் ஒரு கைப்பிடிகடல் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் குளிப்பதால், நீங்களே கெட்ட சக்திகள் நீங்குவதை உணர முடியுமாம்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்