விரைவில் அறிமுகமாகும் பேஸ்புக்கின் புதிய அம்சங்கள்?

Report Print Fathima Fathima in இன்ரர்நெட்
0Shares
0Shares
lankasri.com

சமூகவலைத்தளங்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக்கில் விரைவில் புதிய அம்சங்கள் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில் ஒன்று Red Envelope- இதன்மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும், மற்றொன்று Breaking News- முக்கியமான செய்திகளை வழங்கலாம்.

இதுதொடர்பில் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் வெளியாகாத நிலையில், The Next Web நிறுவன சமூக வலைத்தள இயக்குனர் Matt Navarra இதனை கண்டறிந்துள்ளார்.

எனினும் Breaking News வழங்கவிருப்பதை பேஸ்புக் உறுதி செய்துள்ள நிலையில், மேலதிக தகவல்களை வழங்க மறுத்துவிட்டது.

மேலும் புதிய அம்சங்களை சோதிப்பது வழக்கமான ஒன்று தான் எனவும் பேஸ்புக் விளக்கமளித்துள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்