iOS 11 பதிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள புத்தம் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்
0Shares
0Shares
lankasri.com

ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்காக பிரத்தியேக இயங்குதளத்தினை வடிவமைத்து அறிமுகம் செய்து வருகின்றது.

iOS என அழைக்கப்படும் குறித்த இயங்குதளமானது இதுவரை 10 பதிப்புக்களாக வெளிவந்துள்ளது.

இந்நிலையில் விரைவில் iOS 11 எனும் புதிய பதிப்பினை அறிமுகம் செய்யவுள்ளது. இப்பதிப்பில் பல்வேறு புதிய அம்சங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.

இவற்றுள் முக்கியமாக Screen Recording வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது, இவ் வசதியினை ஐபோன்களில் மட்டுமன்றி ஐபேட்களிலும் பயன்படுத்த முடியும்.

மேலும் இதில் ஆடியோ ரெகார்டிங், வீடியோவை ட்ரிம் செய்தல் மற்றும் ஷேர் செய்தல் என்பனவும் காணப்படுகின்றன.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்