இலங்கையர்கள் அதிகம் பார்வையிடும் இணையத்தளங்கள் - அதிர்ச்சி தகவல்

Report Print Steephen Steephen in இன்ரர்நெட்
0Shares
0Shares
lankasri.com

அதிகமான நேரத்தை செலவிட்டு உலகில் உள்ள மிகப் பெரிய ஆபாச இணையத்தளங்களை பார்வையிடுவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் இலங்கையும் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆபாச இணையத்தளங்களை அதிகமாக பார்வையிடுவதாக கூறப்படும் தென் கொரியா, உக்ரைன், கொலம்பியா, தாய்லாந்து, எத்தியோப்பியா, வியட்நாம், பெலாரஸ், பெரு, தாய்வான் ஆகியே நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆபாச இணையத்தளங்களை பகிரும் நுண் வலைத்தள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டுக்கான இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆபாச இணையத்தளங்களை பார்வையிடுவதில் 2017 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த தரநிலை மாற்றங்களை அடைந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளது.

எத்தியோப்பியா, தென் கொரியா, பாகிஸ்தான், லிபியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் மிகவும் அதிகளவில் ஆபாச இணையத்தளங்களை பார்வையிடுவோர் உள்ள நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் செக்ஸ் என்ற ஆங்கில வார்த்தையை கூகுள் தேடு தளத்தில் அதிகளவில் தேடிய நாடுகளின் வரிசையில் இலங்கை பல வருடங்களாக முதலிடத்தில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆபாச இணையத்தளங்கள் காரணமாவே இலங்கை உட்பட பல நாடுகளில் பாலியல் ரீதியான குற்றச் செயல்கள், பாலியல் வன்கொடுமை , சிறுவர் துஷ்பிரயோகங்கள் என்பன நடப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஆபாச இணையத்தளங்களை தடைசெய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்