வெள்ளத்தில் மூழ்கிய பாலம்: உயிரை பணயம் வைத்து வீரர் செய்த செயல்... பதைபதைக்க வைக்கும் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா
198Shares
198Shares
lankasrimarket.com

கேரளாவில் வெள்ளப்பெருக்கு காரணமாக பாலத்தின் உயரத்தை தாண்டி நீர் வந்த நிலையில் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் குழந்தையின் உயிரை காப்பாற்றிய வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கேரளாவில் தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ளது.

இதுவரை மழைக்கு 29 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கனமழை காரணமாக அங்குள்ள ஒரு பாலத்தின் உயரத்தையும் தாண்டி வெள்ள நீர் வந்து கொண்டிருந்தது.

அப்போது பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் குழந்தை ஒன்றின் உயிரை காப்பாற்றினார்.

அதாவது பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன்னர் குழந்தையை வீரர் தூக்கி கொண்டு ஓடி வரும் காட்சிகள் வெளியாகி மனதை பதைபதைக்க வைக்கிறது.

குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்