குழந்தையையை திருடிச் செல்ல பார்த்த குரங்கு..காப்பாற்ற போராடிய தாய்! வெளியான திக் திக் வீடியோ

Report Print Santhan in இந்தியா
480Shares
480Shares
lankasrimarket.com

குழந்தையை குரங்கு ஒன்று திருடிச் செல்ல முயன்றதால், அதிடமிருந்து காப்பாற்றுவதற்காக தாய் மற்றும் அப்பகுதி மக்கள் போராடியுள்ளனர்.

இந்தியாவின் கர்நாடகாக மாநிலத்திலே இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதில் குழந்தை ஒன்றை பிடித்து வைத்துள்ள குரங்கு, அந்த குழந்தையை தூக்கிச் செல்ல முயன்றுள்ளது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தையின் தாய், குரங்கிடமிருந்து குழந்தையை காப்பாற்ற போராடியுள்ளனர்.

அதில் அங்கிருந்த சில குரங்கின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக, அது சாப்பிடுவதற்காக உணவுகளை போடுகின்றனர்.

ஆனால் குரங்கானது, குழந்தையின் அருகில் யார் வந்தாலும், கடித்துவிடுவது போன்று மிரட்டுகிறது. குழந்தையின் தாய் தொடர்ந்து காப்பாற்ற முயற்சி செய்ததால், அவரின் சேலையை கடித்து கோபத்தை வெளிப்படுத்துகிறது.

அந்த சமயத்தில், குரங்கின் பின்னால் இருந்த நபர் ஒருவர், குழந்தையின் கையை பிடித்து தூக்கியுள்ளார்.

இதைக் கண்ட குரங்கு உடனே அந்த நபரை விரட்டுகிறது. ஆனால் அதற்குள் அவர் ஓடிவிட்டதால், செய்வதறியாமல் குரங்கு நின்றுள்ளது.

குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இருப்பினும் குழந்தைக்கு ஏதேனும் காயங்கள் இருப்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

மேலும் இது தொடர்பான காட்சியை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்