66 ஆண்டுகள் நகத்தை வெட்டாமல் இருந்த நபருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! என்ன ஆனது தெரியுமா?

Report Print Santhan in இந்தியா
451Shares
451Shares
lankasrimarket.com

இந்தியாவில் 66 ஆண்டுகள் நகத்தை வெட்டாமல் கின்னஸ் சாதனை படைத்த நபர், தற்போது நகத்தை வெட்டிய போதும், தொடர்ந்து நகம் வெட்டாத காரணத்தினால் அவரது இடது கையே நிரந்தரமாக ஊனமாகிவிட்டது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால். இவர் கடந்த 66 ஆண்டுகளாக தன்னுடைய இடது கை நகத்தை வெட்டாமல் வளர்த்து வந்து கின்னஸ் சாதனை படைத்தார்.

1952-ஆம் ஆண்டு முதல் தனது இடது கை நகத்தை வெட்ட வேண்டாம் என முடிவு செய்து அதன்படி 66 ஆண்டுகளாக நகத்தை வளர்த்து வந்த நிலையில் தற்போது 82 வயதாகும் அவர் நகத்தை வெட்ட முடிவு செய்தார்.

வலது கையில் நகத்தை வளர்க்காமல், இடது கையில் மட்டும் நகத்தை வளர்த்து வந்தார். சுமார் 31 அடி வளர்ந்துள்ளது.

தொடர்ச்சியாக நகத்தை வெட்டாமல் இருந்ததால் அவரது கையை மடக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் ரிப்லிஸ் பிலிவ் இட் ஆர் நாட், அதிசயமான செயல்புரிந்தவர்கள், விநோதமானவர்கள், சாதனை புரிந்தவர்களை பேட்டி கண்டு ஒளிபரப்புகிறது. இதில் பலரது கேமராக்கள் முன்னிலையில் தான் 66 ஆண்டுகளாக வளர்த்து வந்த நகத்தை ஸ்ரீதர் வெட்டினார்.

அவரின் நகம் அமெரிக்காவில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அவர் நகத்தை வெட்டாத காரணத்தினால் அவரின் இடது கை ஊனமாகியுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அதுமட்டுமின்றி பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

நகம் வளர்ப்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல, இதனை வைத்துக் கொண்டு தூங்க முடியாது.

பல காரியங்கள் செய்ய முடியாது. பல சிரமங்கள் இருக்கின்றன. ஆனால் நான் சவாலாக நகத்தை வளர்த்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்