தாஜ்மஹாலை இடித்து விடுங்கள் - உச்சநீதி மன்றம் காட்டம்

Report Print Trinity in இந்தியா
173Shares
173Shares
lankasrimarket.com

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பாதுகாக்க முடியாவிட்டால் அதனை மூடி விடுங்கள் அல்லது இடித்து விடுங்கள் என்று உச்ச நீதி மன்றம் காட்டமாக கூறியுள்ளது.

தாஜ்மஹால் இந்தியாவின் பெருமைமிகு சின்னமாக பார்க்கப்பட்டு வருகிறது. உலக அதிசயமான இதனை காண வெளிநாடுகளில் இருந்து பல்வேறு சுற்றுலா பயணிகள் இந்தியா வந்து போவதால் அந்நியச்செலாவணி அதிகரித்தது.

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் தாஜ்மஹாலை சுற்றி பல தொழிற்சாலைகள் உருவாகி உள்ளதால் தாஜ்மஹாலின் நிறம் மங்கி காணப்படுகிறது. இதனால் தாஜ்மஹாலை பாதுகாக்கவும் இது குறித்து மத்திய அரசுக்கும் அறிவுரை வழங்கவும் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி எம்.பி.லோகூர் ஆகிய இருவர் முன்னிலையில் இந்த வழக்கு குறித்து விவாதிக்க பட்டது. அப்போது இந்த மனு குறித்து நீதிபதிகள் இருவரும்

கூறுகையில் தாஜ்மஹாலை ரசிப்பதற்காக உலகெங்கும் உள்ள மக்கள் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர்.

பெருமை மிக்க தாஜ்மஹாலை பராமரிக்க முடியாவிட்டால் பேசாமல் தாஜ்மஹாலை மூடி விடுங்கள் அல்லது இடித்து விடுங்கள் என்று நீதிபதிகள் இருவரும் இந்த வழக்கு குறித்து காட்டமாக மத்திய அரசுக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்