நிர்மலாதேவியுடன் மாணவருக்கு நேரடி தொடர்பு: திடுக்கிடும் ஆதாரங்கள் வெளியீடு

Report Print Raju Raju in இந்தியா
734Shares
734Shares
lankasrimarket.com

பேராசிரியை நிர்மலாதேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி நடுவே தொடர்பு இருப்பதற்கான ஆதாரத்தை சிபிசிஐடி பொலிசார் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.

கல்லூரி மாணவிகளை அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி பாலியல் தொழிலுக்கு அழைத்தார் என புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான தொலைபேசி ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியையும் பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில் ஜாமீன் கேட்டு கருப்பசாமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.

தற்போது கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க சிபிசிஐடி பொலிஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதோடு நிர்மலாதேவி, கருப்பசாமி நடுவே தொடர்பு இருப்பதாக கூறியுள்ள சிபிசிஐடி பொலிசார் அவர்கள் இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்ட ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதையடுத்து ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நாளை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்