என்னையும் கடத்தினார்கள்: பிரபல நடிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்

Report Print Kavitha in இந்தியா
98Shares
98Shares
lankasrimarket.com

மலையாள நடிகரரான திலீப் கடந்த ஆண்டு நடிகை ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி வந்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வராத நிலையில் நடிகை பார்வதி “நானும் கடத்தப்பட்டுள்ளேன்” என்று கூறி அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருந்தார்.

இதுபற்றி மேலும் அவர் கூறுவதாவது;

“எனது தோழி நடிகை கடத்தப்பட்ட தகவல் அறிந்து நான் அதிர்ச்சியானேன். ஆனால் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இது எனக்கு மேலும் அதிர்ச்சியை தந்தது.

ஏனென்றால் எனக்கும் அதுபோல் ஒரு சம்பவம் நடந்தது. என்னை கடத்தியது யார் என்பதை இப்போதுகூட தெரிவித்து தண்டனை வாங்கித் தர முடியும்.

ஆனால் அதை நான் விரும்பவில்லை. அவர்கள் எதையும் செய்யத் துணிந்தவர்கள். எனக்கு நடந்த சம்பவத்துக்காக நான் அழுதுகொண்டு மூலையில் உட்கார்ந்து விடவில்லை. அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன்.

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பெண்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை சொல்கிறேன்’ என்றார் பார்வதி.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்