மகளின் தோழியை பலாத்காரம் செய்து படம் எடுத்த கொடூர தந்தைகள்: அதிர்ச்சியில் உறைந்த பொலிஸ்

Report Print Deepthi Deepthi in இந்தியா
344Shares
344Shares
lankasrimarket.com

திருச்சியில் மகளுடன் படிக்கும் 13 வயது மாணவியை பலாத்காரம் செய்து அதை படம் எடுத்து மிரட்டி, கடந்த 3 மாதமாக பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தைகள் இருவரை போக்சோ சட்டத்தில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, தனது தோழி வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தாள். பெற்றோர் தங்களது மகளை அழைத்து விசாரித்தபோது, தோழியின் தந்தை மன்சூர் அலிகான் நமது வீட்டில் அழைத்து சென்று விடுவதாக கூறி, ஆட்டோவில் கடத்திச்சென்று மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என கூறி.

இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனே கானத்தூர் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், பொலிசார் மன்சூர் அலிகான் (38) என்பவரை பிடித்து விசாரித்தபோது மகளை தேடி வீட்டுக்கு வந்த சிறுமியை பலாத்காரம் செய்ததும், இதை நேரில் பார்த்த மற்றொரு தோழியின் தந்தை ரகமதுல்லா (35) என்பவருடன் சேர்ந்து, பலாத்காரம் செய்ததை படம் பிடித்து கடந்த 3 மாதங்களாக மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதை கேட்டதும் பொலிசார் அதிர்ச்சியில் உறைந்தனர். தற்போது குற்றவாளிகள் இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்