சிறுமியை துஷ்ப்ரயோகம் செய்ததை மாடியிலிருந்து பார்த்த பெண்கள்: அதன் பின் நடந்த சம்பவம்

Report Print Trinity in இந்தியா
0Shares
0Shares

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சிறுமியை துஷ்ப்ரயோகம் செய்ததை நேரில் கண்டா பெண்கள் தகவல் கொடுத்ததால் உடனடியாக பொலிஸார் விரைந்து வந்து அச்சிறுமியை மீட்ட சம்பவம் நடந்துள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூரை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை தவறான நோக்கத்துடன் கூட்டி சென்ற நபர் அங்குள்ள முட்புதரில் அப்பெண்ணை பாலியல் துஷ்ப்ரயோகம் செய்திருக்கிறான்.

இந்த சம்பவத்தை அருகில் உள்ள வீட்டின் மாடியில் இருந்து பெண்கள் இருவர் பார்த்துள்ளனர். உடனடியாக அவர்கள் கொடுத்த தகவல் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அந்த சிறுமியை காப்பாற்றினார். அந்த ஆசாமியை கைது செய்தனர்.

அந்த ஆசாமியின் பெயர் ரஹமதுல்லா (35) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மாணவியிடம் கேட்கப்பட்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மாணவியின் சக வகுப்பு தோழி வீட்டிற்கு மாணவி அடிக்கடி செல்லும்போது தோழியின் தந்தையால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருக்கிறார் இந்த மாணவி.

மூன்று மாதத்திற்கு முன்பு இந்த கொடூரம் தனக்கு நடைபெற்றதாக மாணவி கூறியதை அடுத்து மாணவியின் தோழியின் தந்தையான மன்சூர் அகம்மது என்பவரும் கைது செய்யப்பட்டார்.

ரஹமதுல்லாவும் மன்சூர் அஹமதுவும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்