தேசியக்கொடிக்கு அவமரியாதை: எஸ்.வி சேகரின் தேசபக்தியா என கேள்வி

Report Print Trinity in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய எஸ் வி சேகர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றமும் பின் உச்ச நீதிமன்றமும் எஸ் வி சேகரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கைது செய்யும் அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்கியது.

இருப்பினும் 50 நாட்களை கடந்த பின்னும் இன்னமும் எஸ் வி சேகர் கைது செய்யப்படாமல் இருப்பதும் பொலிஸ் பாதுகாப்புடன் "தலைமறைவாக" இருப்பதும் அனைவராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று தாம்பரம் படைப்பை அருகே உள்ள உணவகத்தில் சாப்பிட வந்திருக்கிறார் எஸ் வி சேகர். ஆயுதம் ஏந்திய பொலிஸார் அவருக்கு பாதுகாப்பு கொடுத்தனர்.

எப்போதும் தனது மார்பின் அருகில் குத்தி இருக்கும் தேசிய கொடியை இப்போது எஸ் வி சேகர் தனது சட்டை நுனியில் குத்தி இருந்தார்.

தேசத்தின் மீது இன்னமும் தீரா பற்று கொண்டவர்கள் இதனை பார்க்கும்போது மனவேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இது சமுக வலைதளங்களில் இது தான் உங்கள் தேசபக்தியா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்