அந்த நிமிடங்களில் நடந்தது என்ன? உயிருக்கு போராடிய நடிகை வேதனை

Report Print Fathima Fathima in இந்தியா
146Shares
146Shares
lankasrimarket.com

கேரளாவில் விபத்தில் சிக்கி ஒருமணிநேரம் உயிருக்கு போராடிய நடிகை தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

மலையாள நடிகை மேகா மேத்யூ எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார்.

கார் கவிழ்ந்த நிலையில், ஒரு மணிநேரமாக உயிருக்கு போராடியவரை போட்டோகிராபர் வந்து காப்பாற்றி கொச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

இதுகுறித்து கூறிய மேகா மேத்யூ, அண்ணனின் திருமண நிச்சயதார்த்ததிற்கு சென்ற போது தான் விபத்து நடந்தது.

கார் கவிழ்ந்ததால் என்னால் வெளியே வரமுடியவில்லை, விபத்தை ஏற்படுத்திய மற்றொரு வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது.

கால், கைகளில் ரத்தம் வடிந்தது, இறந்துவிடுவேன் என நினைத்தேன்.

சுற்றிலும் மக்கள் நின்று வேடிக்கை பார்த்தார்கள், போட்டிபோட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்தார்கள்.

கடைசியில் ஒரு போட்டோகிராபர் வந்து என்னை காப்பாற்றினார், மக்களின் மனிதாபிமானத்தை செல்போன் மோகம் மறைத்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்