தமிழக சட்டசபையில் சேலையை பிடித்து இழுத்து வெளியேற்றினார்கள்: பெண் எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு

Report Print Kabilan in இந்தியா
69Shares
69Shares
lankasrimarket.com

தமிழக சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ ஒருவரின் சேலையை பிடித்து இழுத்து, சட்டசபையில் இருந்து வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ விஜயதாரணி. இவர் சட்டசபையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பேச, சபாநாயகரிடம் அனுமதி கேட்டார்.

அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் உண்டானதால், எம்.எல்.ஏ விஜயதாரணி வலுக்காட்டாயமாக பெண் காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.

அப்பொது, காவலர்கள் தனது சேலையை பிடித்து இழுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை விஜயதாரணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

‘சட்டசபையில் கன்னியாகுமரி மாவட்ட பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டேன். நேற்றும் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். ஆனால், எனக்கு பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார்.

தொடர்ந்து நான் வற்புறுத்தியதால் சபை காவலர்களை கொண்டு வெளியேற்றினார். சபை காவலர்கள் என்னை அநாகரீகமான முறையில் காயப்படுத்தி வெளியேற்றினார்கள்.

சேலையைப் பிடித்தும், கையைப் பிடித்து இழுத்தும் வயிற்றை, நெஞ்சை அமுக்கியும் வெளியேற்றினார்கள். சட்டசபையில் சபாநாயகரும் அநாகரீகமான முறையில் பேசினார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்