என் குழந்தையை பார்க்கவிடமாட்றாங்க...கண்ணீர் மல்க புகார் கொடுத்த தாய்

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

தமிழகத்தில் குழந்தையை மீட்டுத்தரக்கோரி பெண் ஒருவர் கண்ணீர் மல்க காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சேதன்ரங்கா. இவருக்கும் சோனல் என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து கோவையில் வசித்து வந்த இவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

வழக்கு தொடர்ந்து வரும் வேளையில் கணவர் சேதன்ரங்கா கட்டுபாட்டில் உள்ள 2 குழந்தைகளை பார்ப்பதற்காக சோனால் சென்ற போது கணவர் பார்ப்பதற்கு மறுத்துள்ளார்.

எவ்வளவு போராடியும் குழந்தையை பார்க்க முடியாததால் விரக்தியடைந்த அவர், அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், இரண்டரை கிலோ தங்கம் உள்ளிட்டவற்றை சேதன்ரங்கா குடும்பத்தினர் வரதட்சனையாக பெற்றுக்கொண்டனர்.

அதற்கு மேலும் அவர்கள் பணம் கேட்டு துன்புறுத்துவதாகவும், தனது உடைமைகளையும், குழந்தைகளையும் அவர்களிடமிருந்து மீட்டுத் தரும்படியும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்