சென்னையில் ஈழத்தமிழர்களுக்காக திரண்ட கூட்டம்: ஸ்தம்பித்த மெரினா!

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

சென்னை மெரினாவில் ஈழத்தமிழர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை போரில் உயிரிழந்த ஈழத்தமிழர்களுக்காக ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மெரினாவில் நினைவேந்தல் என்ற பெயரிலோ அல்லது போராட்டம் நடத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து சென்னை மெரினா, சேப்பாக்கம் பகுதிகளில் 1,000 பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மெரினாவில் நடக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பெண்கள், இளைஞர்கள் என பெருமளவில் கூடினர்.

மேலும் வைகோ, திருமுருகன் காந்தி, தெகலான் பாகவி உள்ளிட்டோர் நினைவேந்தல் பேரணியில் பங்கேற்றனர்.

இதையடுத்து காவல்துறை அறிவுறுத்தலை மீறி நினைவேந்தல் பேரணியில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை ராஜரத்தினம் மைதானத்தில் தங்கவைக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்தார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்