எனக்கா எதுவும் கிடைக்காது? குறி சொன்ன முதியவரை துவைத்து எடுத்த இன்ஸ்பெக்டர்

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

தமிழகத்தில் முதியவர் குறி நன்றாக சொல்லாத காரணத்தினால் இன்ஸ்பெக்டர் அவரை செருப்பால் அடித்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் முனியசாமி (57).

ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட இவர் வயதானவர்களிடம் குறி கேட்பதில் ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பரமக்குடி டவுன் பகுதியில் உள்ள கடையின் வாசலில் இருந்த முதியவரிடம் குறி கேட்டுள்ளார்.

அப்போது, நான் விரைவில் ஓய்வு பெற போவதால், உரிய பணப்பலன்கள் சிக்கலின்றி கிடைக்குமா என்று கேட்க அதற்கு அந்த முதியவர் அதெல்லாம் ஒன்றும் கிடைக்காது கொஞ்சம் பிரச்சனைகள் வரும் என்று கூற, முனியசாமி ஆத்திரமடைந்துள்ளார்.

இதனால் உடனடியாக அவர் அங்கிருந்த செருப்பை எடுத்து முதியவரை தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் முதியவர் கதற, அருகில் இருப்பவர்கள் தடுக்க முயன்றுள்ளனர்.

ஆனால் அவர் எஸ்ஐ என்பதால் ஏன் வீண் வம்பு என்று விலகி போயுள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்ட அங்கிருந்தவர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட, அது வைரலாக பரவியது.

குறித்த வீடியோவைக் கண்ட பொதுமக்கள் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்