மக்களுக்கு எதிராக எது வந்தாலும் எதிர்ப்பேன்: கமல்ஹாசன்

Report Print Kabilan in இந்தியா
54Shares
54Shares
lankasrimarket.com

தூத்துக்குடி சுற்றுப்பயணத்தில் பேசிய கமல்ஹாசன், மக்களுக்கு எதிராக எது வந்தாலும் எதிர்ப்பேன் என தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடிகர் கமல்ஹாசன் பொதுமக்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘மக்களுக்கு எதிராக எது வந்தாலும் எதிர்ப்பேன். நிச்சயம் நாளை நமது என்று நம்புங்கள். நான் நேசிப்பது மக்களைத்தான்.

எனது எஞ்சிய வாழ்வு உங்களுக்காக மட்டும்தான். மக்கள் நீதி மய்யத்தின் நகர்வு ஒவ்வொரு நாளும் வலுத்துக் கொண்டு இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்