அம்மாவை பிரிந்து சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட குட்டி யானை: கண்ணீர் விட்டு அழுத நெகிழ்ச்சி வீடியோ

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவில் அம்மா யானையை பிரிந்து தனியாக சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிக்கும் குட்டி யானை கண்ணீர் விட்டு அழும் வீடியோ வெளியாகி நெஞ்சை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

சுமன் என்ற ஆறு வயது யானை தனது தந்தை யானை பிஜ்ஜி மற்றும் தாய் யானை சந்தாவுடன் வாழ்ந்து வந்த நிலையில் சட்டவிரோதமாக சமீர் என்பவரால் கடத்தி செல்லப்பட்டது.

பின்னர் ஜெய்ப்பூரில் உள்ள சர்கஸில் யானை வைக்கப்பட்டுள்ளது.

அம்மாவை பிரிந்த ஏக்கத்தில் இருக்கும் சுமன் கண்ணீர் விட்டு அழுகிறது, இதோடு அதை கட்டுப்படுத்தும் விதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் உளவியல் ரீதியான சேதமும் சுமனுக்கு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய வனவிலங்குகள் மீட்டல் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் தொண்டு நிறுவனமான Wildlife SOS-ன் தலைவர் கீதா சேஷமணி, சுமனுக்கு எந்தவொரு உதவியும் செய்யப்படவில்லை என்றால் அது 50 ஆண்டுகள் துஷ்பிரயோகம், புறக்கணிப்பு ஆகியவற்றைச் சகித்துக் கொள்ள தான் வேண்டும்.

யானை கடத்தல் தொடர்பாக தொண்டு நிறுவனங்களின் பிரச்சாரங்களுக்கு பொதுமக்களும் ஆதரவளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

கர்நாடக வனப் படைத்தலைவர் பி.கே சிங் கூறுகையில், ஆறு வயதுடைய சுமன் அதன் தாயுடனும், குடும்ப உறுப்பினர்களுடனும் சேரவிடாமல் பிரிப்பது குற்றச்செயலாகும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்