விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு உதவிய கமல்ஹாசன்

Report Print Fathima Fathima in இந்தியா
83Shares
83Shares
lankasrimarket.com

மக்களுடன் பயணம் மேற்கொண்டுள்ள கமல்ஹாசன் நேற்று விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு உதவி செய்து பாராட்டை பெற்றார்.

மக்களுடன் பயணம் என்ற பெயரில் மாவட்டம் தோறும் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

நேற்று மதியம் குளச்சலில் இருந்து கருங்கல் நோக்கி சென்று கொண்டிருந்த போது, ஆனக்குழி அருகே இரண்டு பெண்கள் வந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது.

கீழே விழுந்த பெண்ணுக்கு பலத்த அடிப்பட்டதால் மற்றொருவர் ஆம்புலன்சுக்காக காத்துக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த கமல்ஹாசன், உடனடியாக விரைந்து சென்று தனது காரிலேயே ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதன்பின்னர் வேறொரு காரில் ஏறி தனது பயணத்தை தொடர்ந்தார், கமல்ஹாசனின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்