மிக சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் இன்று கர்நாடக முதல்வர்! எடியூரப்பாவின் வாழ்க்கை பாதை

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

தென்னிந்தியாவில் பாஜகவின் முதல் முதல்வர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான எடியூரப்பா மூன்றாவது முறையாக கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சற்றுமுன்னர் பதவியேற்றுள்ளார்.

எடியூரப்பா 1943ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் திகதி பிறந்தார். தும்கூர் மாவட்டம் எடியூரில் உள்ள கோவிலில் உள்ள கடவுளின் பெயராக அவருக்கு எடியூரப்பா என பெயர் சூட்டப்பட்டது.

சாதாரண குடும்பத்தில் பிறந்த எடியூரப்பா தனது நான்கு வயதில் தாயை இழந்தார்.

மாண்டியாவில் கல்லூரி படிப்பை முடித்த அவர் 1965 ஆம் ஆண்டு அரசுப்பணியில் சேர்ந்த நிலையில் பின்னர் அந்த பணியை உதறி சங்கர் ரைஸ் மில்லில் கிளர்க்காக பணியை தொடங்கினார்.

கல்லூரி நாட்களிலேயே ஆர்எஸ்எஸில் அதிக ஆர்வத்துடன் இருந்த எடியூரப்பா 1972-ம் ஆண்டு தாலுகா அளவிலான தலைவராக உயர்ந்தார்.

அதன்பின் 1983-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பா அதில் வெற்றி பெற்றார்.

இதுவரை 6 முறை போட்டியிட்ட எடியூரப்பா அனைத்து முறைகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

முதல்முறையாக 2007 நவம்பர் 12ம் திகதி முதல் 19-ம் திகதி வரை 7 நாட்கள் மட்டும் முதல்வராக இருந்த எடியூரப்பா ஆட்சி குமராசாமியால் கவிழ்க்கப்பட்டது.

பின்னர் 2008 மே 30 ஆம் திகதி கர்நாடக மாநிலத்தில் பாஜக சார்பில் முதல்வராக பதவியேற்றார்.

3 ஆண்டுகள் 62 நாட்கள் இவர் முதல்வர் பதவியில் இருந்தார். இரு நில ஊழல் வழக்குகளை லோக் ஆயுக்தா பதிவு செய்த நிலையில் 2011 ஜூலை 31-ம் திகதி தனது முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

தற்போது மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார் எடியூரப்பா!

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்