ரயிலில் சிக்கி சாகவிருந்த குழந்தை: உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய நபர்

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவில் இரண்டு நொடியில் இரயிலில் சிக்கவிருந்த குழந்தையை அங்கிருந்த நபர் அற்புதமாக காப்பாற்றியிருக்கும் சம்பவம் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

மும்பையில் உள்ள Mahalaxmi இரயில்வே நிலையத்தில் பெண் ஒருவர் தன் குழந்தையுடன் இரயிலில் ஏற சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாரதவிதமாக இரயில் புறப்பட்டதால், அந்த பெண் இரயிலில் ஏற குழந்தை ஏற முடியாமல் இரயிலுக்கு இடையில் சிக்கவிருந்தது.

இதைக் கண்ட அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர் சச்சின் என்பவர் உடனடியாக அந்த குழந்தையை காப்பாற்றினர். இரண்டு நொடி தாமதமாகியிருந்தாலும், அந்த குழந்தை இறந்திருக்கும்.

இது தொடர்பான காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததால் அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் இது குறித்து கூறுகையில், மொகமத் என்பவர் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் Haji Ali பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பவதற்காக இரயிலில் செல்வதற்கு தயாராகிய போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிறுமி மற்றும் அந்த நபருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மொகமத் குடும்பத்தினர் மும்பைக்கு புதிதாக வந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு இரயிலில் எப்படி செல்ல வேண்டும் என்பது குறித்து தெரியவில்லை என அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்