பேராசிரியை நிர்மலா தேவிக்கு 12 நாள் காவல்: நீதிமன்றம் உத்தரவு

Report Print Santhan in இந்தியா
165Shares
165Shares
lankasrimarket.com

தமிழகத்தில் பேராசிரியை நிர்மலா தேவியை 12 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கும் படி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறான‌ பாதைக்கு தூண்டிய பேராசிரி‌யை நிர்மலா தேவியை கைது செய்து பொலிசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருவதால் குறித்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

மேல் விசாரணைக்காக சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாரணையில் இருந்த நிர்மலா தேவி விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வரும் 28-ஆம் திகதி வரை நிர்மலா தேவியை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்