நடுரோட்டில் காதலியின் கழுத்தை வெட்ட முயன்ற காதலன்

Report Print Santhan in இந்தியா
115Shares
115Shares
lankasrimarket.com

தமிழகத்தில் இரண்டுமாதமாக பேசாமல் இருந்த காதலியின் கழுத்தை காதலன் அறுக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ரேணுகா(17), இவர் தன்னுடைய பள்ளி காலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சாலமன் ராஜா (23) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

தொடர்ந்து இரண்டு வருடமாக காதலித்து வந்த நிலையில் சாலமன் ராஜாவின் நடத்தை சரியில்லாமல் போனதால், ரேணுகா அவரை திருத்த முயற்சித்துள்ளார்.

ஆனால் சாலமன் ராஜா அதை எல்லாம் காதில் வாங்காமல் தன்னுடைய போக்கிலே இருந்துள்ளார். பல முறை சுட்டிக் காட்டிய போதும் சாலமன் சொல் பேச்சு கேட்காத காரணத்தினால், அவரிடம் பேசுவதை ரேணுகா நிறுத்தியுள்ளார்.

இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த அவர் ரேணுகாவை பல முறை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரோ உன் நடத்தை சரியில்லை தயவு செய்து என் வாழ்க்கையில் குறுக்கிடாதே என்று கூறி மறுத்துள்ளார்.

பெரிதும் விரக்தியடைந்த அவர் இன்று ரேணுகா கல்லூரிக்கு புறப்பட்டு வந்த நேரத்தில் அவரை வழி மறித்து ஏன் என்னை வெறுக்கிறாய் என்று கேட்ட போது, உனக்கும் எனக்கும் செட்டாகாது டா என்று கூறியுள்ளார்.

உடனே சாலமன் எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று கையில் வைத்திருந்த பேப்பர் கட்டரால் ரேணுகாவின் கழுத்தை அறுக்க முயன்றுள்ளார்.

உடனடியாக ரேணுகா தன்னுடைய கையை வைத்து தடுத்தால், அவரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து ரேணுகா கூச்சலிட்டதால், அருகிலிருந்தவர்கள் வருவதைப் பார்த்து சாலமன் ஓடியுள்ளான்.

சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவி அளித்த புகாரின் அடிப்பைடையில் தலைமறைவாக இருந்த சாலமனை பொலிசார் தேடி கண்டு பிடித்து கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் தான் அஸ்வினி என்ற பெண் காதலனால் கொல்லப்பட்டார். மீண்டும் அதுபோன்றதொரு சம்பவம் நடக்கவிருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக ரேணுகா தப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்