ஐபிஎல் பார்ப்பதில் தகராறு: மருமகனை கத்திரிகோலால் குத்திக் கொலை செய்த மாமனார்

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

தெலுங்கானாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் மருமகனை மாமனார் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரம்கீடா கிராமத்தை சேர்ந்தவர் புஜய்யா. இவரது மகள் அக்‌ஷிதாவை வெங்கட் என்பவருக்கு திருமணம் செய்து வந்தார்.

புஜய்யா சலூன் கடையில் பணிபுரியும் நிலையில் அதே கடையில் வெங்கட்டும் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை மது போதையில் வீட்டுக்கு வந்த வெங்கட் டிவியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்க்க நினைத்துள்ளார்.

ஆனால் அவரின் மாமனார் புஜய்யா டிவியில் சீரியல் பார்த்து கொண்டிருந்த நிலையில் மருமகனுக்கு டிவி ரிமோட்டை கொடுக்க மறுத்துள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் ஆத்திரத்தில் கத்திரிக்கோலை எடுத்து வெங்கட்டை புஜய்யா குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த வெங்கட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கோமாவில் இருந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

புஜய்யா, வெங்கட் இடையில் குடும்ப சண்டை ஏற்கனவே இருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மருமகனை கொலை செய்த குற்றத்துக்காக புஜய்யாவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்