அலகாபாத்தில் திருமண நிகழ்ச்சியின் போது, மணமகள் வீட்டிற்கு, மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் சிலர் சைக்கிளில் சென்றனர்.
அலகாபாத் பகுதியில் வசித்துவருபவர் ஜவேந்திர குமார். அவருக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. இவர் மணமகள் வீட்டிற்கு சைக்கிளில் சென்றுள்ளார்.
சுற்றுசூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற வித்தியாசமான செயலில் ஈடுபட்ட ஜவேந்திர குமாரை, அப்பகுதியினர் பாராட்டி வருகின்றனர்.