ஆஷிபா கொலை வழக்கில் கேள்விக்குறியாகும் பொலிசின் திருமண வாழ்க்கை: காத்திருக்கும் மணமகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பொலிசின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

8 பேர் கொண்ட கும்பலானது, சிறுமி ஆஷிபாவை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ்காரரும் ஈடுபட்டுள்ளார்.

தீபக் கஜுரியா (28) என்ற பொலிஸ் ஆவார். இவருக்கும், முதுநிலை பட்டம் பெற்றுள்ள ரேணு சர்மா (24) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 7-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

வரும் 26-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட தீபக் கஜுரியா, கதுவா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால் ரேணு சர்மாவின் திருமணம் கேள்விக்குறியாகி உள்ளது.

என் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதற்கு முன்னர், ஒரே ஒரு முறை சிறையில் தீபக்கை சந்தித்து, சிறுமி பலாத்காரத்தில் தொடர்பு இருக்கிறதா, இல்லையா என்று கேட்க நினைக்கிறேன். அவர் என்னிடம் உண்மையாக இருப்பார்.

இந்தக் குற்றத்தில் தொடர்பு இருப்பது உண்மைதான் என்று அவர் கூறினால், வேறு மாப்பிள்ளை பார்க்கும்படி என் பெற்றோரிடம் கூறுவேன். தொடர்பு இல்லை என்று அவர் கூறினால், எவ்வளவு காலமானாலும் அவருக்காகக் காத்திருப்பேன்.

ஆனால், சிறையில் தீபக்கை சந்திக்க என்னை அனுமதிக்க மறுக்கின்றனர். ஒரு குழந்தையை பலாத்காரம் செய்து கொல்கிற அளவுக்கு தீபக் கஜுரியா நடந்து கொண்டிருப்பார் என்று நான் நம்பவில்லை. .

அதேநேரத்தில் உண்மை எதுவென்று எனக்குத் தெரியவில்லை. சிபிஐ விசாரணைக்குப் பிறகுதான் தெரியவரும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்