ஊடகங்களால் தான் எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது : சீமான் ஆவேசம்

Report Print Athavan in இந்தியா
151Shares
151Shares
lankasrimarket.com

ஊடகங்கள் தான் எங்களை குற்றவாளி போல் சித்தரித்து விட்டது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

காவலர்களைத் தாக்கியவர்கள் நாம் தமிழர் கட்சியினர் இல்லை. காவலர்களைத் தாக்கியது தவறு, போராடுபவர்களை காவலர்கள் தாக்குவதும் தவறு. நாங்கள் கலவரத்தில் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தமிழ் சினிமா துறையினரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் கடந்த 10-ஆம் தேதி சென்னையில் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அன்றைய தினம் அண்ணா சாலையில் நடந்த புரட்சி போராட்டத்தால் சென்னையே ஸ்தம்பித்தது. இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் தமிழ் அமைப்பு என கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது போலீஸ்காரர் 3 பேர் மீது கையில் ஒரு கொடியை ஏந்தி கொண்டு ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த வீடியோ வைரலாகியதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு காரணமே நாம்தமிழர் கட்சி தான் என ஊடகங்களில் செய்தி வெளியாகியது.

இதைத் தொடர்ந்து காவலர்கள் புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து சீமான் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், யார் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதை காவல்துறை தான் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை. நாம் தமிழர் கட்சியினரை போலீசார் மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் தமிழர் கட்சியினரை குற்றவாளிகளாக்குவது தவறானது. போராட்டத்தின் போது பொலீசை தாக்கியது யார் என்றே தெரியவில்லை. ஊடகங்கள் தான் எங்களை குற்றவாளி போல் சித்தரித்து விட்டது அதனால் எங்கள் மீது வழக்கு பதியப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஊடகங்களும் காவல் துறையும் எங்கள் மீது அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள் எனவும் ஆவேசமாக தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்