பேத்தி பாடிய கண்ணே கலைமானே பாடலை ரசித்த கருணாநிதி: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா
127Shares
127Shares
lankasrimarket.com

திமுக தலைவர் கருணாநிதி தனது பேத்தி பாடிய பாடலை ரசித்து கேட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் கருணாநிதியின் தொண்டையில் உணவு உண்பதற்கும், சுவாசிப்பதற்கும் ஏதுவாக சிறிய குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

எனவே அவர் பேசமுடியாத நிலையில் உள்ளார். இருப்பினும் அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகம் போன்ற இடங்களுக்கு அவ்வப்போது கருணாநிதி வருகை தருகிறார்.

இந்நிலையில் கருணாநிதியை அவரின் பேத்தியும், மு.க தமிழரசுவின் மகளுமான பூங்குழலி சந்திக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

சந்திப்பின் போது மூன்றாம் பிறை திரைப்படத்தில் இடம்பெற்ற ”கண்ணே கலைமானே” என்ற பாடலை பாடி பூங்குழலி தாத்தாவை மகிழ்வித்தார்.

பேத்தி பாடுவதை கேட்ட கருணாநிதி சிறிய புன்னகையை உதிர்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்